Thursday 31 January 2013

Tuesday 22 January 2013





திகைக்க வைத்த புத்தக கண்காட்சி....

நான் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இதுவரை புத்தக கண்காட்சியை பார்த்தது இல்லை. இந்த ஆண்டு எப்படியும் புத்தக கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். கடந்த சனிக்கிழமை புத்தக கண்காட்சியை காண நானும் என் நண்பனும் சென்றோம். நுழைவாயிலேயே இரண்டு காவலர்கள் இங்கு வண்டிய நிருத்தாதே உள்ளே போயிரு... உள்ளே போயிரு... என்று வேகமாக கத்திக்கொண்டிருந்தார். என்னடா போலீஸ்காரர் இவ்வளவு கிராக்கி பண்ணிக்கிறார். அவ்வளவு கூட்டமா வந்து விடப்போகிறது என்று மனதில் நினைக்கும் முன்பே வண்டி நுழைவாயிலை தாண்டி உள்ளே போனதும்....  நான் முதல் முதலில் வண்டலூர் மிருககாட்சிக்கு சென்ற நினைவுதான் வந்தது. இரு புறமும் மரங்கள் நீண்ட சாலை.... வண்டலூரில் அப்படித்தான் இருக்கும் நீண்ட சாலை இடை இடையே ஏங்காவது ஒரு மிருகத்தை கூண்டில் அடைத்து வைத்திருப்பார்கள். அய்யயோ... வந்து மாட்டிக்கிட்டோம் போல என்று மனது நினைத்துக்முடிக்கும் முன் வண்டிக்கு டோக்கன் வாங்கி கொள்ளுங்கள் என்று ஒருவர் கூவினார்... அலுவலகம் அதற்கு கூட செலவு வைக்காமல் பாஸ் தந்திருந்தது. வண்டியை எங்கே விடுவது என்று நானும் நண்பனும் திகைத்து விட்டோம், அவ்வளவு வண்டிகள்... வரும் எளிதாக எடுப்பதற்காக ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். கொஞ்ச தூரம் நடந்துதான் செல்ல வேண்டியது இருந்து. நடக்க நடக்க அதிக ஆர்வம் எழ துவங்கியது.  செல்லும் நெடுவெல்லாம் வண்டிகள், பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்கள்... குழந்தைகள் கூட்டி வந்த பெற்றோர்கள். ஊன்றுகோழை ஊன்றியபடி முதியவர்கள் பலர் ஆங்காங்கே தென்பட்டனர். 


டிக்கெட் எடுக்கும் கவுண்டருக்கு அருகில் செல்லும் போது விகடன் குழுமத்தின் விளம்பரங்கள் மிரளவைத்தது. நாணய விகடன் கட்அவுட்களை கொண்டே டிக்கெட் விநியோகிக்கும் கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் டிக்கெட் எடுக்கும் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளவில்லை, ஏன்என்றால் அந்த செலவை கூட அலுவலகம் எங்களுக்கு  வைக்க வில்லை. அலுவலகத்தில் இலவச நுழைவு சீட்டு கொடுத்திருந்தார்கள். புத்தக கண்காட்சி அரங்கிற்குள் நுழையும்போது இரண்டு மூன்று பேர் வழியில் நின்று கொண்டு பொதுமக்கள் எடுத்து வந்திருந்த நுழைவு சீட்டிலே ஒரு பகுதி பரிசுக்காக அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை கிழித்து ஒரு பெரிய அட்டை பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதையும் தாண்டி நுழைந்தேன்...





 ஒரு நிமிடம் திகைத்து விட்டேன். உள்ளே நின்ற கூட்டத்தைப்பார்த்து. அவ்வளவு கூட்டம். அரங்கு அரங்குகளாக ஒவ்வொரு பதிப்பங்களும் தன் படைப்புகளை காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வைத்திருப்பதை பார்த்து மிரண்டு விட்டேன். எத்தனை எத்தனை தலைவர்கள், அவர்களை பற்றி வாழ்க்கை குறிப்புகள். மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகங்கள், அடிச்சுவடு புத்தகங்கள், தன்னை தானே புழந்து எழுதிக்கொண்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான் நிறைய எண் கண்ணில் பட்டது. என்னால் நினைத்திருக்க முடியாத புத்தகங்கள் எல்லாம் அங்கு அரங்குகள் அமைத்திருந்த பதிபகத்தார் பொக்கிஷமாக பாது காத்திருந்ததை கண்டு மிகவும் வியந்தேன்


 இதை எல்லாம் தாண்டி நான் பார்த்த அரங்குகளில் எல்லாம் வியக்க வைத்த ஒரு புத்தகம் தான் விகடன் இயர்புக் 2013. அதில் என்ன இருக்கிறது என்று நானும் அந்த புத்தகத்தை எடுத்து பக்கங்களை திருப்பி பார்த்தேன். வாழ்வில் நடந்து முடிந்த காலத்தையும், வாழ்ந்து முடிந்த தலைவர்களையும்,  விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு, வருகிற காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் இப்படி அனைத்து துறைகளை பற்றியும் மிக துள்ளியமாக  தற்போது நம் கண்முன்னாள் நடந்ததுபோல், நடந்து கொண்டிருப்பதை  சுட்டிகாட்டிய விகடன் பிரசுரத்தின் படைப்புகளின் பொக்கிஷமான விகடன் இயர்புக் 2013 புத்தகத்தை எல்லா புத்தக அரங்குகளிலும்  என் கண்களால் காண முடிந்தது.  
731 புத்தக அரங்குகள் மொத்தம் இருக்கிறது என்று வெளியே வரும் போது பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எத்தனை முறை எண்ணிப்பார்தாலும் அங்கு அமைந்திருக்கும் அரங்குகளை எண்ணி முடிக்க முடியாது.
ஒரு நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த நிமிடத்தில் உலகிற்கே தெரிந்துவிடும் அளவிற்கு மிடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் போதிலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே கணினியில் இணையதளம் மூலம் உலகத்தையே ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்த போதிலும்.... சிறிது கவனிக்காமல் வைத்திருந்தால் செல்லரித்துப்போகும் புத்தகங்களின் அருமையை அன்றுதான் உணர்ந்தேன். 
இந்த புத்தக பொக்கிஷங்களை அழியாமல் காத்து வரும் அனைத்து புத்தக பதிப்பாளர்களும் அழியாத பொக்கிஷம்தான்....


Friday 11 January 2013


அன்னம் கொடுப்பவளின்
 அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
 நிலம்வணங்கும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்
அன்புடன்
இசக்கி