Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

Monday, 24 December 2012


கற்பழித்த கும்பல் பற்றி புகார்


 அளித்த பெண்ணை லாட்ஜில்


 அடைத்து போலீஸ் அதிகாரிகள்


 மீண்டும் கற்பழித்தனர்


உத்தரபிரதேசம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இந்து, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மாதம் இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து  விட்டதாக இந்துவின் பெற்றோர், அக்பர்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங், இச்சம்பவம் தொடர்பாக பைசாபாத்தில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றுகூறி இந்துவை பைசாபாத்திற்கு அழைத்துச் சென்றார். டி.ஜி.பி. அலுவலகத்துக்கு போகாமல், பைசாபாத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கிய அவர், இந்துவை மிரட்டி கற்பழித்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் தன்னை பலவந்தமாக லாட்ஜில் அடைத்து வைத்து கற்பழித்த சம்பவத்தை, அம்பேத்கர் நகரில் உள்ள தனது தோழிக்கு செல்போன் மூலமாக இந்து 'மெஸேஜ்' செய்தார். மெஸேஜை படித்துப் பார்த்த தோழி, பைசாபாத் போலீஸ் சூப்பிரண்ட்டிடம் புகார் அளித்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்ற சூப்பிரண்ட், அரை நிர்வாண நிலையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்து, இந்துவை மீட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உபாத்யாயா என்பவரை விசாரணை அதிகாரியாக சூப்பிரண்ட் நியமித்தார். 

லாட்ஜுக்கு வந்து சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங்கின்  பிடியிலிருந்து சூப்பிரண்ட் தன்னை மீட்பதற்கு முன்னதாக, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள உபாத்யாயாவும் தன்னை மான்சிங்குடன் சேர்ந்து கற்பழித்ததாக சூப்பிரண்டிடம் இந்து முறையிட்டுள்ளார். 

தன்னை கடந்த நவம்பர் மாதம் அம்பேத்கர் நகரில் கற்பழித்த கும்பல் மீதும், டிசம்பர் மாதம் 14ம் தேதி பைசாபாத் லாட்ஜில் கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங், விசாரணை அதிகாரி உபாத்யாயா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவிற்கு இந்து தற்போது மனு அனுப்பியுள்ளார்.

Wednesday, 19 December 2012


நான் உயிர் வாழ வேண்டும்: 



கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பிறகு அந்த மாணவி ஈவு, இரக்கமின்றி 6 வாலிபர்களாலும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார். நள்ளிரவு பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட அவரை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆட்டோ கிடைக்காதால், அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி கொடூரத்தை சந்திக்க நேரிட்டது. நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி விட்டதால் அவருக்கு 24 மணி நேர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சப்தர்ஜங் மருத்துவ மனையில் அந்த மாணவிக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று அந்த மாணவியின் சிறுகுடல் பகுதியில் ஆபரேஷன் நடந்தது. கிருமி தொற்று ஏற்பட்டிருந்த சிறு குடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. 150 முதல் 200 செ.மீ நீளத்துக்கு சிறுகுடல் இருந்தால் தான் உணவு ஜீரணமாகி ஒருவர் உயிர் வாழ முடியும். மாணவியின் சிறுகுடல் கணிசமாக அகற்றப்பட்டு விட்டதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. என்றாலும் மாணவியை காப்பாற்றி விட முடியும் என்று சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இன்று மாலைக்குள் மாணவிக்கு கொடுத்து வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி விட்டு அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடையிடையே மயக்கம் தெளிந்து நினைவு வருகிறது. தனக்கு நேர்ந்துள்ள கொடூரத்தை நினைத்து கதறி அழும் அந்த மாணவியால் பேச முடியவில்லை. 

மெல்ல முனங்கியபடி உள்ளார். நேற்றிரவு சற்று தெம்பான அவர் பேனா, பேப்பர் வாங்கி எழுதி காட்டினார். அதில் அவர் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன் என்று எழுதினார். அதைப்பார்த்து மாணவியின் பெற்றோர், சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கண்ணீர் விட்டனர். உயிருக்குப் போராடி வரும் நிலையிலும் அந்த மாணவி தைரியமாக சிகிச்சைகளை எதிர்கொள்வதாக டாக்டர் தெரிவித்தார். 

இதற்கிடையே மாணவியை சிதைத்த 6 கயவர்களில் இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகளில் 2 பேர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்ட நிலையில் நேற்று ஒருவர் கைதாகியுள்ளார். மேலும் ஒருவரை  பிடிக்க பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.