Sunday 10 March 2013

எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்




எஸ்.எம்.எஸ். மூலம் 
செல்போனை சார்ஜ் செய்யலாம்

நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

ஆனால் செல்போன் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய எங்காவது மின்சார சுவீட்சைத்தான் தேடிப்போக வேண்டும். இனி இந்த சிரமம் வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

லண்டனைச் சேர்ந்த பப்பல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். செய்த உடனே சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் இல்லாத ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு சூரிய ஒளி மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் உடனே சார்ஜ் ஆகும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக செல் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் இருப்பிடங்களில் டெவிஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். அதன்மூலம் சூரியஒளி மின்சார நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.

ஒரு போனில் பேட்டரி சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இதற்காக அதிக செலவு ஆகாது என்று பப்பல்லோ கிரிட் நிர்வாகி டேனியல் பெக்கேரா தெரிவித்தார்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்




 பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள்
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராசாசி கொண்டு வந்திருந்த ‘குலக்கல்வித் திட்டத்’தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (மிமிஜி) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.


அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.