Sunday, 10 March 2013

எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்




எஸ்.எம்.எஸ். மூலம் 
செல்போனை சார்ஜ் செய்யலாம்

நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

ஆனால் செல்போன் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய எங்காவது மின்சார சுவீட்சைத்தான் தேடிப்போக வேண்டும். இனி இந்த சிரமம் வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

லண்டனைச் சேர்ந்த பப்பல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். செய்த உடனே சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் இல்லாத ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு சூரிய ஒளி மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் உடனே சார்ஜ் ஆகும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக செல் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் இருப்பிடங்களில் டெவிஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். அதன்மூலம் சூரியஒளி மின்சார நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.

ஒரு போனில் பேட்டரி சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இதற்காக அதிக செலவு ஆகாது என்று பப்பல்லோ கிரிட் நிர்வாகி டேனியல் பெக்கேரா தெரிவித்தார்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்




 பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள்
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராசாசி கொண்டு வந்திருந்த ‘குலக்கல்வித் திட்டத்’தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (மிமிஜி) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.


அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

Tuesday, 19 February 2013



Thursday, 31 January 2013

Tuesday, 22 January 2013





திகைக்க வைத்த புத்தக கண்காட்சி....

நான் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இதுவரை புத்தக கண்காட்சியை பார்த்தது இல்லை. இந்த ஆண்டு எப்படியும் புத்தக கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். கடந்த சனிக்கிழமை புத்தக கண்காட்சியை காண நானும் என் நண்பனும் சென்றோம். நுழைவாயிலேயே இரண்டு காவலர்கள் இங்கு வண்டிய நிருத்தாதே உள்ளே போயிரு... உள்ளே போயிரு... என்று வேகமாக கத்திக்கொண்டிருந்தார். என்னடா போலீஸ்காரர் இவ்வளவு கிராக்கி பண்ணிக்கிறார். அவ்வளவு கூட்டமா வந்து விடப்போகிறது என்று மனதில் நினைக்கும் முன்பே வண்டி நுழைவாயிலை தாண்டி உள்ளே போனதும்....  நான் முதல் முதலில் வண்டலூர் மிருககாட்சிக்கு சென்ற நினைவுதான் வந்தது. இரு புறமும் மரங்கள் நீண்ட சாலை.... வண்டலூரில் அப்படித்தான் இருக்கும் நீண்ட சாலை இடை இடையே ஏங்காவது ஒரு மிருகத்தை கூண்டில் அடைத்து வைத்திருப்பார்கள். அய்யயோ... வந்து மாட்டிக்கிட்டோம் போல என்று மனது நினைத்துக்முடிக்கும் முன் வண்டிக்கு டோக்கன் வாங்கி கொள்ளுங்கள் என்று ஒருவர் கூவினார்... அலுவலகம் அதற்கு கூட செலவு வைக்காமல் பாஸ் தந்திருந்தது. வண்டியை எங்கே விடுவது என்று நானும் நண்பனும் திகைத்து விட்டோம், அவ்வளவு வண்டிகள்... வரும் எளிதாக எடுப்பதற்காக ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். கொஞ்ச தூரம் நடந்துதான் செல்ல வேண்டியது இருந்து. நடக்க நடக்க அதிக ஆர்வம் எழ துவங்கியது.  செல்லும் நெடுவெல்லாம் வண்டிகள், பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்கள்... குழந்தைகள் கூட்டி வந்த பெற்றோர்கள். ஊன்றுகோழை ஊன்றியபடி முதியவர்கள் பலர் ஆங்காங்கே தென்பட்டனர். 


டிக்கெட் எடுக்கும் கவுண்டருக்கு அருகில் செல்லும் போது விகடன் குழுமத்தின் விளம்பரங்கள் மிரளவைத்தது. நாணய விகடன் கட்அவுட்களை கொண்டே டிக்கெட் விநியோகிக்கும் கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் டிக்கெட் எடுக்கும் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளவில்லை, ஏன்என்றால் அந்த செலவை கூட அலுவலகம் எங்களுக்கு  வைக்க வில்லை. அலுவலகத்தில் இலவச நுழைவு சீட்டு கொடுத்திருந்தார்கள். புத்தக கண்காட்சி அரங்கிற்குள் நுழையும்போது இரண்டு மூன்று பேர் வழியில் நின்று கொண்டு பொதுமக்கள் எடுத்து வந்திருந்த நுழைவு சீட்டிலே ஒரு பகுதி பரிசுக்காக அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை கிழித்து ஒரு பெரிய அட்டை பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதையும் தாண்டி நுழைந்தேன்...





 ஒரு நிமிடம் திகைத்து விட்டேன். உள்ளே நின்ற கூட்டத்தைப்பார்த்து. அவ்வளவு கூட்டம். அரங்கு அரங்குகளாக ஒவ்வொரு பதிப்பங்களும் தன் படைப்புகளை காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வைத்திருப்பதை பார்த்து மிரண்டு விட்டேன். எத்தனை எத்தனை தலைவர்கள், அவர்களை பற்றி வாழ்க்கை குறிப்புகள். மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகங்கள், அடிச்சுவடு புத்தகங்கள், தன்னை தானே புழந்து எழுதிக்கொண்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான் நிறைய எண் கண்ணில் பட்டது. என்னால் நினைத்திருக்க முடியாத புத்தகங்கள் எல்லாம் அங்கு அரங்குகள் அமைத்திருந்த பதிபகத்தார் பொக்கிஷமாக பாது காத்திருந்ததை கண்டு மிகவும் வியந்தேன்


 இதை எல்லாம் தாண்டி நான் பார்த்த அரங்குகளில் எல்லாம் வியக்க வைத்த ஒரு புத்தகம் தான் விகடன் இயர்புக் 2013. அதில் என்ன இருக்கிறது என்று நானும் அந்த புத்தகத்தை எடுத்து பக்கங்களை திருப்பி பார்த்தேன். வாழ்வில் நடந்து முடிந்த காலத்தையும், வாழ்ந்து முடிந்த தலைவர்களையும்,  விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு, வருகிற காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் இப்படி அனைத்து துறைகளை பற்றியும் மிக துள்ளியமாக  தற்போது நம் கண்முன்னாள் நடந்ததுபோல், நடந்து கொண்டிருப்பதை  சுட்டிகாட்டிய விகடன் பிரசுரத்தின் படைப்புகளின் பொக்கிஷமான விகடன் இயர்புக் 2013 புத்தகத்தை எல்லா புத்தக அரங்குகளிலும்  என் கண்களால் காண முடிந்தது.  
731 புத்தக அரங்குகள் மொத்தம் இருக்கிறது என்று வெளியே வரும் போது பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எத்தனை முறை எண்ணிப்பார்தாலும் அங்கு அமைந்திருக்கும் அரங்குகளை எண்ணி முடிக்க முடியாது.
ஒரு நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த நிமிடத்தில் உலகிற்கே தெரிந்துவிடும் அளவிற்கு மிடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் போதிலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே கணினியில் இணையதளம் மூலம் உலகத்தையே ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்த போதிலும்.... சிறிது கவனிக்காமல் வைத்திருந்தால் செல்லரித்துப்போகும் புத்தகங்களின் அருமையை அன்றுதான் உணர்ந்தேன். 
இந்த புத்தக பொக்கிஷங்களை அழியாமல் காத்து வரும் அனைத்து புத்தக பதிப்பாளர்களும் அழியாத பொக்கிஷம்தான்....


Friday, 11 January 2013


அன்னம் கொடுப்பவளின்
 அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
 நிலம்வணங்கும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்
அன்புடன்
இசக்கி

Monday, 31 December 2012

                       எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்




வரிசை எண்படத்தின் பெயர்வெளியான தேதி
1சதிலீலாவதி28-03-1936
2இரு சகோதரர்கள்1936
3தட்சயக்ஞம்31-03-1938
4வீர ஜெகதீஷ்1938
5மாயா மச்சீந்திரா22-04-1939
6பிரகலாதா12-12-1939
7வேதவதி (அல்லது) சீத ஜனனம்22-02-1941
8அசோக்குமார்10-07-1941
9தமிழ் அறியும் பெருமாள்30-04-1942
10ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண்03-03-1943
11ஹரிச்சந்திரா14-01-1944
12சாலிவாகனன்16-02-1945
13மீரா03-11-1945
14ஸ்ரீமுருகன்04-06-1946
15ராஜகுமாரி11-04-1947
16பைத்தியக்காரன்26-09-1947
17அபிமன்யூ06-05-1948
18ராஜமுக்தி09-10-1948
19மோகினி31-10-1948
20ரத்னகுமார்15-12-1949
21மருதநாட்டு இளவரசி02-04-1950
22மந்திரி குமாரி24-06-1950
23மர்ம யோகி02-02-1951
24சர்வாதிகாரி14-09-1951
25அந்த மாண் கைதி14-03-1952
26குமாரி11-04-1952
27என் தங்கை31-05-1952
28நாம்05-03-1953
29ஜெனோவா (மலையாளம்)1953
30பணக்காரி1953
31ஜெனோவா (தமிழ்)1953
32மலைக்கள்ளன்22-07-1954
33கூண்டுக்கிளி26-08-1954
34குலேபகாவலி29-07-1955
35அலிபாபாவும் 40 திருடர்களும்14-01-1956
36மதுரை வீரன்13-04-1956
37தாய்க்குப் பின் தாரம்21-09-1956
38சக்ரவர்த்தி திருமகள்18-01-1957
39ராஜராஜன்26-04-1957
40புதுமை பித்தன்02-08-1957
41மகாதேவி22-11-1957
42நாடோடி மன்னன்22-08-1958
43தாய் மகளுக்குக் கட்டிய தாலி31-12-1959
44பாக்தாத் திருடன்06-05-1960
45ராஜாதேசிங்கு02-09-1960
46மன்னாதி மன்னன்19-10-1960
47அரசிளங்குமரி01-01-1961
48திருடாதே23-03-1961
49சபாஷ் மாப்பிளே14-07-1961
50நல்லவன் வாழ்வான்31-08-1961
51தாய் சொல்லைத் தட்டாதே07-11-1961
52ராணி சம்யுக்தா14-01-1962
53மாடப்புறா16-02-1962
54தாயைக் காத்த தனயன்13-04-1962
55குடும்பத் தலைவன்15-08-1962
56பாசம்31-08-1962
57விக்கிரமாதித்தன்27-10-1962
58பணத்தோட்டம்11-01-1963
59கொடுத்து வைத்தவள்09-02-1963
60தர்மம் தலைக் காக்கும்22-02-1963
61கலை அரசி19-04-1963
62பெரிய இடத்துப் பெண்10-05-1963
63ஆனந்த ஜோதி28-06-1963
64நீதிக்குப் பின் பாசம்15-08-1963
65காஞ்சித் தலைவன்26-10-1963
66பரிசு15-11-1963
67வேட்டைக்காரன்14-01-1964
68என் கடமை13-03-1964
69பணக்காரக் குடும்பம்24-04-1964
70தெய்வத்தாய்18-07-1964
71தொழிலாளி25-09-1964
72படகோட்டி03-11-1964
73தாயின் மடியில்18-12-1964
74எங்க வீட்டுப் பிள்ளை14-01-1965
75பணம் படைத்தவன்27-03-1965
76ஆயிரத்தில் ஒருவன்09-07-1965
77கலங்கரை விளக்கம்28-08-1965
78கன்னித்தாய்10-09-1965
79தாழம் பூ23-10-1965
80ஆசை முகம்10-12-1965
81அன்பே வா14-01-1966
82நான் ஆணையிட்டால்04-02-1966
83முகராசி18-02-1966
84நாடோடி14-04-1966
85சந்திரோதயம்27-05-1966
86தாலி பாக்கியம்27-08-1966
87தனிப் பிறவி16-09-1966
88பறக்கும் பாவை11-11-1966
89பெற்றால்தான் பிள்ளையா09-12-1966
90தாய்க்குத் தலைமகன்13-01-1967
91அரசக்கட்டளை19-05-1967
92காவல்காரன்07-09-1967
93விவசாயி01-11-1967
94ரகசிய போலீஸ் 11511-01-1968
95தேர்த்திருவிழா23-02-1968
96குடியிருந்த கோவில்05-03-1968
97கண்ணன் என் காதலன்25-04-1968
98புதிய பூமி27-06-1968
99கணவன்15-08-1968
100ஒளி விளக்கு20-09-1968
101காதல் வாகனம்21-10-1968
102அடிமைப்பெண்01-05-1969
103நம்நாடு07-11-1969
104மாட்டுக்கார வேலன்14-01-1970
105என் அண்ணன்21-05-1970
106தலைவன்24-07-1970
107தேடி வந்த மாப்பிள்ளை29-08-1970
108எங்கள் தங்கம்09-10-1970
109குமரிக் கோட்டம்26-01-1971
110ரிக்க்ஷாக்காரன்29-05-1971
111நீரும் நெருப்பும்18-10-1971
112ஒரு தாய் மக்கள்09-12-1971
113சங்கே முழங்கு04-02-1972
114நல்ல நேரம்10-03-1972
115ராமன் தேடிய சீதை13-04-1972
116நான் ஏன் பிறந்தேன்09-06-1972
117அன்ன மிட்ட கை15-09-1972
118இதய வீணை20-10-1972
119உலகம் சுற்றும் வாலிபன்11-05-1973
120பட்டிக்காட்டுப் பொன்னையா10-08-1973
121நேற்று இன்று நாளை12-07-1974
122உரிமைக்குரல்07-01-1974
123சிரித்து வாழ வேண்டும்30-1-1974
124நினைத்ததை முடிப்பவன்09-05-1975
125நாளை நமதே04-07-1975
126இதயக்கனி22-08-1975
127பல்லாண்டு வாழ்க31-10-1975
128நீதிக்குத் தலைவணங்கு18-03-1976
129உழைக்கும் கரங்கள்23-05-1976
130ஊருக்குப் உழைப்பவன்12-11-1976
131நவரத்தினம்05-03-1977
132இன்று போல் என்றும் வாழ்க05-05-1977
133மீனவ நண்பன்14-08-1977
134மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்14-01-1978
135அவசர போலீஸ் 100-
136நல்லதை நாடு கேட்கும்-
வரிசை எண்பிறமொழி படத்தின் பெயர்வெளியான தேதி
1ஏக்தா ராஜா (ஹிந்தி)15-06-1951
2சர்வாதிகாரி (தெலுங்கு)05-10-1951