Tuesday 18 December 2012

சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி கோவிலில் 

வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள்: 

23-ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 23-ந்தேதி ஏகாதசி விழாவும், 24-ந்தேதி துவாதசி விழாவும் கொண்டாடப்படுவதால் 2 நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும், நெரிசல் இன்றி தரிசனம் செய்யவும் விரிவான ஏற்பாடுகளை திருமலை தேவஸ்தானம் செய்து வருகிறது.
 
23-ந்தேதி அதிகாலை நடை திறந்ததும் 1.45 மணிக்கு வி.ஐ.பி.க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 5 மணிக்குள் வி.ஐ.பி. தரிசனம் நிறுத்திக் கொள்ளப்படும். அதன்பின் மற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பாத யாத்திரையாக அலிபிரி வழியாக வரும் பக்தர்களுக்கு காளி கோபுரத்தில் 12 இடங்களிலும், ஸ்ரீவாரி மெட்டு வழியாக வருபவர்களுக்கு 8 இடங்களிலும் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 300 ரூபாய் கட்டண டிக்கெட் வாங்கியவர்கள் காலை 8 மணிக்கு மேல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய பல வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
 
2 நாட்களிலும் வி.ஐ.பி. களுக்கு ஆரத்தி தரிசன ஏற்பாடு கிடையாது. அதே போல் தங்கும் விடுதிகளுக்கு முன் பதிவும் கிடையாது. முன்னால் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அறை ஒதுக்கப்படும் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.


0 comments:

Post a Comment